2023 ஆண்டு மலர்

மின்காந்தள்

2023 Annual Newsletter

உலகத் தாய்மொழி நாள் - 2023​
International Mother Language Day - 2023​

வணக்கம்!

பிப்ரவரி 21 உலகத் தாய் மொழி நாள் என்பது நாம் அனைவரும் அறிவோம். தொடர்ந்து 11 ஆண்டுகளாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் தமிழ்ப்பள்ளியும் இணைந்து கொண்டாடி வரும் இந்நாளினை, இவ்வாண்டு பிப்ரவரி 26 அன்று கொண்டாட இருக்கிறோம். கொரோனா தொற்றுக்கு பிறகு, மீண்டும் நம் தமிழ்ப் பள்ளி “தமிழ்த் திருவிழாவையும் (Carnival) கொண்டாட இருக்கிறது.
பிள்ளைகள் உருவாக்கும் படைப்புகளை விவரிக்கும் கண்காட்சி, விளையாட்டு, இளையோர்களுக்கான பேச்சுப் போட்டிகள், பெரியோர்களுக்கான கவிதை, மற்றும் கட்டுரைப் போட்டிகள் என்று பல சிறப்புகள் உண்டு!
வாருங்கள், பங்குகொள்ளுங்கள்…பயன்பெறுங்கள்!!

As we all know, Feb. 21, 2023 is the International Mother Language Day. Minnesota Tamil Sangam, and Tamil School are jointly planning to celebrate it on Feb. 26, 2023. This will be our 11th year celebrating International Mother Language Day. On this same day, Tamil School is also planning to celebrate the much awaited “Carnival Festival”. Kid’s dream projects display, small games for kids, Speech competition for kids, Essay competition, and Poem competition for adults all are planned to be conducted. You are all invited to come, participate and celebrate the event.

மின்காந்தள்
2023 ஆண்டு மலர்
2023 Annual Newsletter

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் -
மினசோட்டாவின் ஆண்டு மலர் மின்காந்தள்!

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்"
-குறுந்தொகை
நமது ஆண்டு மலரான மின்காந்தளின் முதல் பதிப்பு , இதோ உங்களுக்காக!

சங்கமம் 2023 - பிப்ரவரி 5, 2023
Sangamam 2023 - February 5, 2023

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் பதினைந்தாவது ஆண்டு சங்கமம் விழா வெற்றிகரமாக இனிதே அரங்கேறியது!

இந்நிகழ்ச்சி,  கருவானது முதல், விழாவாகக் கனிந்த நாள் வரை, அயராது உழைத்து, பல நிகழ்ச்சிகளை வழங்கிடப் பயிற்சி தந்த பயிற்ச்சியாளர்கள், உறுதுணையாய் நின்ற பெற்றோர்கள், ஒருங்கமைத்த  ஒருங்கிணைப்பாளர்கள்,  சீரிய பயிற்சிகளால் அரங்கிலே பல வண்ணங்கள் படைத்த பங்கேற்பாளர்கள்  மற்றும் பல வகையில் உதவிய தன்னார்வளர்கள் என அனைவருக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

 

பனி என்றும் பாராமல், நேரத்திற்கு வந்து நிகழ்ச்சி முடியும் வரை, அரங்கு நிறைய அமர்ந்து, பங்கேற்பாளர்களை அளவுகடந்து உற்சாகப்படுத்திய, நம் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் அன்பு மிகவும் பாராட்டுக்குறியது!

 

உங்கள் மேலான கருத்துக்களை (feedback) இந்த இணைப்பில் பதிவிடவும்:
https://bit.ly/3DKUcUT

சனவரி 2023 - தமிழ் மொழி மரபுத் திங்கள்

சனவரி 2023 - தமிழ் மொழி மரபுத் திங்கள்!
January 2023 Tamil Language and Heritage Month

மினசோட்டா மாநில ஆளுநர் 2023 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மரபுத் திங்கள்" என பிரகடனப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக வழங்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு அங்கீகாரத்தினை, தமிழ் மொழி, கலை மற்றும் மரபினை மினசோட்டா மண்ணில் போற்றி கொண்டாடி வரும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் தனது நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கொடையாளர்கள், மினசோட்டாவின் தமிழுறவுகள், கலை பயிற்றுநர்கள் என அனைவருடனும் நன்றியுடன் பகிர்வதில் பேருவகை கொள்கிறது. இந்தப் பெருமையோடு தமிழர்த் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.
We are excited to share that The Honorable Governor of Minnesota has proclaimed January 2023 as "Tamil Language and Heritage Month"

செயற்குழுவில் இணையுங்கள்! Join our board!

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப் பணியாற்ற அழைக்கிறோம். கீழுள்ள படிவத்தில் உங்களின் விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
MNTS invites you to join as a board member to serve our Tamil Community in Minnesota. Please register your interest in this form below.